பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை வழியாக சென்னை - கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது எப்போது

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:மதுரை, திருநெல்வேலி வழியாக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் 2019 பிப்., 15ல் டில்லி - வாரணாசி இடையே துவக்கப்பட்டது. டில்லியில் புறப்படும் இந்த ரயில் கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி சென்று அதே நாளில் டில்லி திரும்புகிறது. எட்டு

மதுரை:மதுரை, திருநெல்வேலி வழியாக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் 2019 பிப்., 15ல் டில்லி - வாரணாசி இடையே துவக்கப்பட்டது. டில்லியில் புறப்படும் இந்த ரயில் கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி சென்று அதே நாளில் டில்லி திரும்புகிறது. எட்டு மணி நேரத்தில்760 கி.மீ., துாரத்தை கடக்கிறது. 2வது வந்தே பாரத் ரயில் டில்லி - கத்ரா ஸ்டேஷன்கள் இடையே இயக்கப்பட்டது. தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள், சென்சாரில் இயங்கும் குடிநீர் குழாய்கள், முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலில் வைபை வசதி உள்ளது.

ரயிலில் காற்றை கிழித்து செல்லும் வகையில் விமானத்தை போன்ற வடிவமைப்பு இருக்கும். ஸ்டேஷன்களில் ரயிலை உடனடியாக நிறுத்த முடியும். வந்தே பாரத் ரயில் ஒன்று தலா ரூ.100 கோடி மதிப்பில் வடிவமைக்கப்படுகின்றன.தற்போது சென்னை - மதுரை வரை மின்மயமாக்கத்துடன் இரட்டை அகல ரயில் பாதை உள்ளது. மதுரை - கன்னியாகுமரி வரை பணிகள் நடக்கின்றன.

இப்பணிகள் இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படவுள்ளன.மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தேஜஸ் ரயிலை தவிர ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, டபுள்டக்கர், ஜனசதாப்தி போன்ற அதி விரைவு ரயில்கள் இல்லை.

சமூக ஆர்வலர்பாண்டியராஜா கூறியதாவது: சென்னை- மதுரை இடையே வேகமாக ரயில்களை இயக்கும் வகையில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி வரையில் இரட்டை பாதை பணிகளை விரைந்து முடித்து சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கினால் தென் மாவட்ட பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
21-ஜூலை-202109:55:12 IST Report Abuse
R Hariharan இந்த எக்ஸ்பிரஸ் தேவை இல்லை. அதற்கு பதிலாக விரையு எக்ஸ்பிரஸ், சன சதாப்தி, கரீப் ரத எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களிலும், சென்னை மதுரை செங்கோட்டை திருநெல்வேலி செக்டரில் கூடுதல் ரயில் சேவைகள் தொடங்க வேண்டும். மதுரை கொல்லம் பாதையில் நீண்ட தூர ரயில் சேவை தொடங்க வேண்டும். கொல்லம் மும்பை, நியூ டெல்லி, ஹைதெராபாத், கொல்கத்தா, பெங்களூரு, திருப்பதி வாரணாசி ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு ரயில் சேவை வேண்டும். திருவந்தரப்புரம் சென்னை எக்ஸ்பிரஸ் கொல்லம் செங்கோட்டை, மதுரை வழியாக விட வேண்டும். திருச்சிராப்பள்ளி செங்கோட்டை வழி காரைக்குடி, விருதுநகர் இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ் விட வேண்டும். அகல பாதை, டபுள் லைன், எலெக்ட்ரிபிகேஷன் ஒர்க் ஆகிவையற்றவை மதுரை செக்டர் முடிக்க வேண்டும். மதுரை போடிநாயக்கனுர் பாதை விரைவில் முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X