பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழி படிப்புக்கு இட ஒதுக்கீடு: டி.என்.பி.எஸ்.சி., மனு தள்ளுபடி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை : சட்டத்திருத்தத்தின்படி வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுவதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவை முன்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யக்கோரிய டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:தமிழ்

மதுரை : சட்டத்திருத்தத்தின்படி வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுவதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவை முன்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யக்கோரிய டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப்1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜனவரி 20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.,) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப் படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை.கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலை தொலைநிலைக் கல்வியில் கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்து சான்று பெறுகின்றனர்.

தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. டி.என்.பி.எஸ்.சி., யின் குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக் கல்வி, கல்லுாரி வரை தமிழ்வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சக்திராவ் மனு செய்தார்.மார்ச்சில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுவதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும்.இதை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைமுறையின் ஒவ்வொரு நிலையிலும், 2020 தேர்வு அறிவிப்பு நடைமுறையிலிருந்து பின்பற்ற வேண்டும் என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., தாக்கல் செய்த மனு: சட்டத்திருத்தத்திற்கு முன் தேர்வு அறிவிப்பு வெளியானது. தேர்வு நடத்திவிட்டோம். தமிழ்வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றுவது மற்றும் அனைவரின் கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைச் சிரமங்கள் உள்ளன.காலதாமதம் ஏற்படும். சட்டத்திருத்தத்தின்படி முன்தேதியிட்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். சட்டத்திருத்தத்தின்படி எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டது.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது. நீதிபதிகள், 'தமிழ்வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை உட்பட சில பல்கலைகளில் முறைகேடாக சான்று பெறுகின்றனர்,' என அதிருப்தி வெளியிட்டனர். டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X