தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தும் 'குடி'மகன்கள்!

Added : ஜூலை 21, 2021
Share
கோவை:தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தும் 'குடி'மகன்கள், ரயிலில் அடிபட்டு இறக்கும் முன், ரயில்வே போலீசார் கண் விழித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வடகோவை, ரத்தினபுரி, கணபதி, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர் வரையிலான துாரத்தில் இருபுறங்களிலும், அதிக குடியிருப்புகள் உள்ளன.இந்த இடைப்பட்ட ரயில்வே இடைவெளியில், குடிமகன்கள் தினமும்

கோவை:தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தும் 'குடி'மகன்கள், ரயிலில் அடிபட்டு இறக்கும் முன், ரயில்வே போலீசார் கண் விழித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வடகோவை, ரத்தினபுரி, கணபதி, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர் வரையிலான துாரத்தில் இருபுறங்களிலும், அதிக குடியிருப்புகள் உள்ளன.இந்த இடைப்பட்ட ரயில்வே இடைவெளியில், குடிமகன்கள் தினமும் தண்டவாளத்திலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக, கொரோனா காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.இதனால் 'குடி'மகன்களுக்கு தண்டவாளப் பகுதி, 'பார்' போல் மாறியது. 'குடி'மகன்கள் ரயிலில் சிக்கி உயிரிழக்கும் முன், ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்தாண்டு இருகூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து, மது அருந்திய நான்கு கல்லுாரி மாணவர்கள் ரயிலில் அடிபட்டு, உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X