பொது செய்தி

தமிழ்நாடு

உக்கடம் பெரியகுளம் 'பளிச்' புற்கள், செடிகள் போயாச்சு!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் வளர்ந்திருந்த புற்கள் செடிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சியில் உள்ள குளங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளது. குளக்கரையில் ,'செல்பி ஸ்பாட்', நடைபாதை, புல்தரை, பொழுதுபோக்கு, அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.விடுமுறை
 உக்கடம் பெரியகுளம் 'பளிச்' புற்கள், செடிகள் போயாச்சு!

கோவை:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் வளர்ந்திருந்த புற்கள் செடிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சியில் உள்ள குளங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளது. குளக்கரையில் ,'செல்பி ஸ்பாட்', நடைபாதை, புல்தரை, பொழுதுபோக்கு, அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.விடுமுறை தினங்களில், ஏராளமான மக்கள் பொழுதுபோக்கிற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட குளங்களுக்கு செல்கின்றனர்.கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், குளக்கரையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. புற்கள், செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தன.தற்போது வார இறுதி நாட்களில், அதிக மக்கள் வருவதால், உக்கடம் பெரியகுளத்தில் வளர்ந்த புற்கள் மற்றும் செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. புதர் மண்டி இருந்த இடங்கள் தற்போது சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X