பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் நகரங்களுக்கு முதலில் தடுப்பூசி! எதிர்பார்க்கிறது கோவை தொழில்துறை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை;மூன்றாம் அலை வரும் முன் தடுப்பூசி செலுத்தினால், தொழில் முடக்கத்தையும் ஊரடங்கையும் தவிர்க்கலாம் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.கோவையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இன்னும் முற்றுப்பெறவில்லை. தினமும் 200 பேர் இன்னும் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த எண்ணிக்கையை விரைவாக குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர்

கோவை;மூன்றாம் அலை வரும் முன் தடுப்பூசி செலுத்தினால், தொழில் முடக்கத்தையும் ஊரடங்கையும் தவிர்க்கலாம் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.கோவையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இன்னும் முற்றுப்பெறவில்லை. தினமும் 200 பேர் இன்னும் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த எண்ணிக்கையை விரைவாக குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் கருதுகின்றனர்.வரும் செப்டம்பரில் 3வது அலை வரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.தொழில் நிறுவனங்கள், அடுத்த அலை வராமல் தடுக்க, தொழில் நிறுவனங்களில் கட்டுப்பாடுகளை, தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.இரண்டு முறை ஏற்பட்ட நோய் தொற்று அனுபவம், தொழில்துறையினரை கடும் நெருக்கடிக்கு உட்படுத்தியுள்ளது. அடுத்த முறையை தவிர்த்தால் மட்டுமே, தொழில் நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்ப முடியும்.அடுத்த தொற்று பரவலை தடுக்க, தடுப்பூசி மிக முக்கியம். தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், அதிக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்.இது குறித்து, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது:தொழில் துறை மீண்டும் முடங்காமல் இருக்க, 3ம் அலை வரும் முன் தொழில்துறையினர், பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, தொய்வின்றி கடைபிடிக்க வேண்டும்.தொழில்கள் மீண்டும் செயல்பட, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடவும், தொழில் நகரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதிக அளவு தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வரும் செப்டம்பருக்குள், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி, வரும் முன் காக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X