பொது செய்தி

தமிழ்நாடு

'பட்டாக்கத்தி பைரவர்கள்' ஒரு வழியாக கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வடவள்ளி:வீரகேரளத்தில், நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வீரகேரளம், ராஜயோகம் நகரில், நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய மர்ம நபரிடமிருந்து, போலீசார் கத்தியை பறிமுதல் செய்து, மர்ம நபர்களை அனுப்பி வைத்த, சி.சி.டி.வி., வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.இதுகுறித்து, ராஜயோகம் நகர் குடியிருப்போர்

வடவள்ளி:வீரகேரளத்தில், நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வீரகேரளம், ராஜயோகம் நகரில், நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய மர்ம நபரிடமிருந்து, போலீசார் கத்தியை பறிமுதல் செய்து, மர்ம நபர்களை அனுப்பி வைத்த, சி.சி.டி.வி., வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.இதுகுறித்து, ராஜயோகம் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில், தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றி வருவதாக, வடவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து, பட்டா கத்தியுடன் சுற்றிய மர்ம நபர்களை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சி.சி.டி.வி., கேமராவில் பதிவான பைக்கின் எண் கொண்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், பட்டாகத்தியுடன் சுற்றிய நபர்கள், உப்பிலிபாளையத்தை சேர்ந்த கஜேந்திரன், 26, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நிர்மல், 23 ஆகியோர் என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X