சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பெண்களை விபச்சாரத்தில் தள்ளியவர்கள் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் குடும்ப பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த புரோக்கர் பாண்டியராஜா 56, சத்துணவு அமைப்பாளர் குணசேகரன் மற்றும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். குடும்ப பெண்கள் சிலரை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ேஹமமாலாவுக்கு தகவல் கிடைத்தது. வடக்குமாசிவீதி புரோக்கர் பாண்டியராஜாவிடம்

மதுரை : மதுரையில் குடும்ப பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த புரோக்கர் பாண்டியராஜா 56, சத்துணவு அமைப்பாளர் குணசேகரன் மற்றும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

குடும்ப பெண்கள் சிலரை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ேஹமமாலாவுக்கு தகவல் கிடைத்தது. வடக்குமாசிவீதி புரோக்கர் பாண்டியராஜாவிடம் வாடிக்கையாளர் போல் போலீசார் பேசினர்.குருவிக்காரன் சாலை பாலம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு வருமாறு புரோக்கர் கூற, போலீசார் அங்கு சென்றனர். விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதைதொடர்ந்து பாண்டியராஜா, குணசேகரன் மற்றும் 2 பெண்களை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: குடும்ப பெண்கள் சிலரை செல்லுார், வில்லாபுரம் என ஒவ்வொரு ஏரியாவுக்கும் அனுப்பி தொழில் செய்துள்ளனர். சில சமயம் புரோக்கர்களே அழைத்துச் சென்று வந்துள்ளனர்.இத்தொழிலில் உள்ள பெண்கள் மூலம் புதிதாக குடும்ப பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். மதிச்சியம் குணசேகரன் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.குடிசை தொழில் போல் இத்தொழிலை செய்து வந்துள்ளனர். பாண்டியராஜா மீது ஏற்கனவே அண்ணாநகர் உட்பட பல்வேறு ஸ்டேஷன்களில் விபச்சார வழக்குகள் உள்ளன, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X