பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டை ஆக்கிரமித்து இடைஞ்சல்! வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இன்னல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் ரோட்டை ஆக்கிரமித்து இரும்பு கம்பிகள் வாகனங்களில் ஏற்றப்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிப்படைகின்றனர்.கோவை, நியூ சித்தாபுதூர், பாரதியார் ரோட்டில் ஏ.கே., ஸ்டீல்ஸ், ஜே.கே., ஸ்டீல்ஸ் என்ற பெயரில் ஸ்டீல் குடோன்கள் செயல்படுகின்றன. இங்கு, ரோட்டை ஆக்கிரமித்து பெரிய இரும்பு கம்பிகள் வாகனங்களில் ஏற்றப்படுவதால், போக்குவரத்து
 ரோட்டை ஆக்கிரமித்து இடைஞ்சல்! வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இன்னல்

கோவை:கோவையில் ரோட்டை ஆக்கிரமித்து இரும்பு கம்பிகள் வாகனங்களில் ஏற்றப்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிப்படைகின்றனர்.கோவை, நியூ சித்தாபுதூர், பாரதியார் ரோட்டில் ஏ.கே., ஸ்டீல்ஸ், ஜே.கே., ஸ்டீல்ஸ் என்ற பெயரில் ஸ்டீல் குடோன்கள் செயல்படுகின்றன. இங்கு, ரோட்டை ஆக்கிரமித்து பெரிய இரும்பு கம்பிகள் வாகனங்களில் ஏற்றப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:வாகன பார்க்கிங் வசதியின்றி கட்டப்பட்ட, கட்டடத்தில் செயல்படும் ஸ்டீல் குடோன்களால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. வாகனங்களை ரோட்டில் நிறுத்தி, 40 அடி நீள இரும்பு கம்பிகளை, வாகனங்களில் ஏற்றுகின்றனர்.ரோட்டை ஆக்கிரமிப்பதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் இருப்பதால், பல கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர்.பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருப்பதால், பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்று வருவதற்கு, இடைஞ்சலாக உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.போலீசார் எச்சரித்து சென்றும், தொடர்ந்து ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களில் பொருட்களை ஏற்றி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.புகார் குறித்து, உரிய விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X