சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
நாயை திருடியவர் கைதுமதுரை: மேலமடை சரவணகுமார் 38. ஆவின் ஊழியர். வீட்டில் புறா, நாய், ஆடு வளர்க்கிறார். ஜூலை 10ல் இவரது நாய் திருடப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மேலமடை சிக்னல் அருகே ஆட்டோவில் நாய் கொண்டு செல்வதை சரவணகுமாரின் நண்பர் பார்த்து தகவல் தெரிவித்தார். ஆட்டோவை பின்தொடர்ந்து நாயை மீட்டார். விசாரணையில், கடத்தியவர் ஆழ்வார்புரம் அர்ஜூன் 30,

நாயை திருடியவர் கைதுமதுரை: மேலமடை சரவணகுமார் 38. ஆவின் ஊழியர். வீட்டில் புறா, நாய், ஆடு வளர்க்கிறார். ஜூலை 10ல் இவரது நாய் திருடப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மேலமடை சிக்னல் அருகே ஆட்டோவில் நாய் கொண்டு செல்வதை சரவணகுமாரின் நண்பர் பார்த்து தகவல் தெரிவித்தார். ஆட்டோவை பின்தொடர்ந்து நாயை மீட்டார். விசாரணையில், கடத்தியவர் ஆழ்வார்புரம் அர்ஜூன் 30, எனத்தெரிந்தது. அவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.கொலை செய்த 5 பேர் கைதுபேரையூர்: சின்னக்கட்டளை ஆறுமுகத்தான் மகன் முத்துராஜா 27, ஜெயபாண்டி 29, கார்த்திக் 22, ராஜதுரை 24 உட்பட 5 பேர், அதே ஊரைச் சேர்ந்த சங்கையா மகன் முத்துராஜாவை 33, முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொன்றனர்.அவர்களை டி.எஸ்.பி., சரோஜா, இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.109 மது பாட்டில்களுடன் ஒருவர் கைதுஉசிலம்பட்டி: சந்தைக்குள் உள்ள அரசு மதுபான கடை அருகே எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள கடையில் வைத்து மதுவிற்ற கருத்தப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். 109 மதுபாட்டில்கள் பறிமுதலானது.விஷம் குடித்து ஆசிரியை தற்கொலைஉசிலம்பட்டி: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி எதிர்புறம் வி.ஐ.பி., நகரில் வசித்தவர் இன்பரேகா 48. நாட்டாமங்கலம் அரசு கள்ளர் பள்ளி இடைநிலை ஆசிரியை. நேற்று மாலை 4:00 மணியளவில் வீட்டில் விஷம் குடித்தார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X