பொது செய்தி

தமிழ்நாடு

போதை ஊசி செலுத்தியதாக தாய், மகன் உட்பட மூவர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
போத்தனூர்:போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை மாத்திரைகளை ஊசி மருந்து மூலம், சிறுவர்களுக்கு செலுத்தும் கும்பல் பிடிபட்டு வருகிறது. இதுவரை ஆறு பேர் பிடிபட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாநகர தெற்கு பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜாவின் தனிப்படையான எஸ்.ஐ., ஜெசிஸ் உதயராஜ், ஏட்டுகள் வடிவேல், ஸ்ரீஜித்

போத்தனூர்:போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை மாத்திரைகளை ஊசி மருந்து மூலம், சிறுவர்களுக்கு செலுத்தும் கும்பல் பிடிபட்டு வருகிறது. இதுவரை ஆறு பேர் பிடிபட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாநகர தெற்கு பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜாவின் தனிப்படையான எஸ்.ஐ., ஜெசிஸ் உதயராஜ், ஏட்டுகள் வடிவேல், ஸ்ரீஜித் மற்றும் அசோக்குமார் ஆகியோர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இதில் சதாம் நகரில் போதை ஊசி மருந்து செலுத்திய பானு,52, அவரது மகனான பழைய பொருட்கள் வாங்கி, விற்கும் ரியாஸ், 30 ஆகியோர் சிக்கினர். இவர்களிடமிருந்து, 120 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதுபோல் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் தேடுதல் நடந்தது. இதில், வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே, உக்கடம், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அப்துல் ரஷீத். 33 சிக்கினார்.இவரிடமிருந்து, 40 போதை மாத்திரைகள், ஊசி, மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு மருந்து, மாத்திரை சப்ளை செய்த சதாம் நகரை சேர்ந்த கருமி நிசாரின் வீட்டிலிருந்தும் மாத்திரைகள் சிக்கின. தப்பியோடிய நிசாரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X