பொது செய்தி

தமிழ்நாடு

டேக்வாண்டோ போட்டியில் கோவை வீரர்கள் அமர்க்களம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:ஆன்லைன் வாயிலாக நடந்த சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில், கோவை வீரர்கள், 15 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் பதக்கம் வென்றனர்.ஹரியானா டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில், ஆன்லைன் வாயிலாக சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடத்தப்பட்டன. இதில், 18 நாடுகளிலிருந்து, 900க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.சப்-ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் மாணவ- மாணவிகளுக்கான 'ஸ்பீடு கிக்கிங்'

கோவை:ஆன்லைன் வாயிலாக நடந்த சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில், கோவை வீரர்கள், 15 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் பதக்கம் வென்றனர்.ஹரியானா டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில், ஆன்லைன் வாயிலாக சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடத்தப்பட்டன. இதில், 18 நாடுகளிலிருந்து, 900க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.சப்-ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் மாணவ- மாணவிகளுக்கான 'ஸ்பீடு கிக்கிங்' மற்றும் பூம்சோ பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.கோவை மாவட்டத்தின் சார்பில், 28 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், 15 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இத்தகவலை, கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அசோசியேஷன் செயலாளர் சிஜூகுமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X