பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன கடன்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை : உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் தொகை வழங்கப்பட உள்ளதால் தகுதியுள்ள நிறுவனங்கள் வேளாண் வணிக துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இந்நிறுவனங்களை வணிகரீதியாக உருவாக்கும் வகையில் வேளாண்மை விற்பனை வேளாண் வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே ஆக.,2020ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதற்காக தமிழக அரசு நிதி

மதுரை : உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் தொகை வழங்கப்பட உள்ளதால் தகுதியுள்ள நிறுவனங்கள் வேளாண் வணிக துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இந்நிறுவனங்களை வணிகரீதியாக உருவாக்கும் வகையில் வேளாண்மை விற்பனை வேளாண் வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே ஆக.,2020ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இடைநிலை மூலதன கடன் தொகை மூலம் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியை இந்நிறுவனங்கள் மேற்கொள்ளலாம்.ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வீதம் ஐந்தாண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்தில் ரூ.ஒரு கோடி வரை நிறுவனம் கடன் பெறும் போது 50 சதவீத உத்தரவாதத்தை அரசு வழங்கும்.தற்போது வட்டிக்கு 12 - 14 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.

அரசின் சலுகையாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு 8 - சதவீத வட்டி சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். மதுரை நிறுவனங்கள் வேளாண் வணிக துணை இயக்குனர் அலுவலகத்தை 0452 - 253 0021ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X