அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொடநாடு மர்மம் விலகும் அ.தி.மு.க., 'மாஜி'யால் சலசலப்பு

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை தொடர்பான மர்மங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வர உள்ளன' என அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா மரணத்துக்கு பின் அவருக்கு சொந்தமான நீலகிரி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப். 23ல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில்

சென்னை:'கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை தொடர்பான மர்மங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வர உள்ளன' என அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு பின் அவருக்கு சொந்தமான நீலகிரி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப். 23ல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளன.இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அக்கட்சி ஐ.டி. பிரிவு முன்னாள் மாநில செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் 'கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை விலகாத மர்மங்கள்; வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் விரைவில்' என பதிவிட்டார்.

அதன்பின் 'கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள் ஆதாரங்களுடன் அனைத்திற்கும் அதிர வைக்கும் விடைகள்' என பதிவிட்டார்.இது குறித்து சுவாமிநாதனிடம் கேட்டபோது ''கொடநாடு தொடர்பான வழக்கில் சில ஆதாரங்கள் சிக்கி உள்ளன. விரைவில் மர்மங்கள் விலகும் என போலீஸ் தரப்பில் தகவல் கசிந்துள்ளது. அதையே பதிவு செய்தேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202111:18:02 IST Report Abuse
vpurushothaman ஓ 1. அது போலிஸ் தரப்புச் செய்தியா ? ஏதோ இவர்தான் கண்டு பிடித்த மாதிரி..............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X