மாநிலங்கள் பிரிவினையில் இட ஒதுக்கீடு பாதிக்குமா

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:மாநிலங்களை பிரிப்பதால் இட ஒதுக்கீடு பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.ஒருங்கிணைந்த பீஹார் மாநிலம் ஹசாரிபார்க் மாவட்டத்தில் பிறந்தவர் பங்கஜ் குமார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர் 1999ல் ராஞ்சிக்கு வந்து உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் 2000ல் பீஹாரில்

புதுடில்லி:மாநிலங்களை பிரிப்பதால் இட ஒதுக்கீடு பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பீஹார் மாநிலம் ஹசாரிபார்க் மாவட்டத்தில் பிறந்தவர் பங்கஜ் குமார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர் 1999ல் ராஞ்சிக்கு வந்து உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் 2000ல் பீஹாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவானது.

இதன்பின் பங்கஜ் குமார் குரூப் 3 சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் அளித்த ஜாதி சான்றிதழில் நிரந்தர வசிப்பிடம் பீஹார் தலைநகர் பாட்னா என்றும் தற்போது ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதை சுட்டிக் காட்டி இரு மாநிலங்களில் இட ஒதுக்கீடு சலுகை பெற முடியாது என கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பங்கஜ்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றமும் ஒருவர் இரு மாநிலங்களில் இட ஒதுக்கீடு சலுகை கோர முடியாது என தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து பங்கஜ் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஒருவர் இரு மாநிலங்களில் இட ஒதுக்கீடு சலுகை பெற முடியாது. அதேசமயம் ஒரு மாநிலம் பிரிக்கப்படுவதால் இட ஒதுக்கீடு சலுகையை அவர் எப்படி இழக்க முடியும் என்பது தெரியவில்லை. முதன் முறையாக இத்தகைய வழக்கை அமர்வு சந்திக்கிறது. அதனால் இது குறித்து அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அமர்வுக்கு ஆலோசனை தெரிவிக்க வேண்டும். வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X