எஸ்.பி.,க்கு காஷ்மீர் 'டிரான்ஸ்பர்' சுவேந்து மீது போலீசார் வழக்கு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தம்லுக்:மேற்கு வங்கத்தில் போலீஸ் அதிகாரியை காஷ்மீருக்கு இடமாற்றம் செய்வதாக கூறிய மாநில பா.ஜ. தலைவர் சுவேந்து அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி அமைந்துள்ளது.புர்பா மெடினிபூர் மாவட்டம் தம்லுக் நகரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ. கூட்ட பாதுகாப்பு பணியில் போலீஸ் எஸ்.பி. அமர்நாத்

தம்லுக்:மேற்கு வங்கத்தில் போலீஸ் அதிகாரியை காஷ்மீருக்கு இடமாற்றம் செய்வதாக கூறிய மாநில பா.ஜ. தலைவர் சுவேந்து அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி அமைந்துள்ளது.புர்பா மெடினிபூர் மாவட்டம் தம்லுக் நகரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ. கூட்ட பாதுகாப்பு பணியில் போலீஸ் எஸ்.பி. அமர்நாத் இருந்தார்.அவரிடம் நந்திகிராம் தொகுதியில் மம்தா வெற்றியை பறித்தவரும் பா.ஜ. மாநில தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது:

எங்கள் மீது பதிவு செய்யப்படுபவை பொய் வழக்குகள் என நிரூபிக்கும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவேன்.முதல்வரின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அலுவலகத்தில் இருந்து போலீஸ் அதிகாரிகளுக்கு வந்த அழைப்புகள் தொடர்பான தகவல்களும் என்னிடம் உள்ளன.

நீங்கள் மாநில அரசின் துணையுடன் செயல்படுகிறீர்கள். எங்களுக்கு பின்னால் மத்திய அரசு உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் அல்லது பாரமுல்லா மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து சுவேந்து அதிகாரி உட்பட பா.ஜ.வை சேர்ந்த 14 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தும்லுக் போலீசார் நேற்று தாங்களாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X