அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : கனவு கூட காணாதீர்!

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில் ஆலோசனை வழங்கிஇருந்தார். நம் அரசியல்வாதிகளை பற்றி இன்னமுமா புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்?



latest tamil news



லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்து கட்டி நல்லாட்சி நடத்துவதற்காகவா 360 கோடி ரூபாயை அள்ளி கொடுத்து, ஓர் ஆலோசகரை நியமித்தனர்? ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 2 கோடி ரூபாய் செலவழித்து, 'ஒன்றிணைவோம்' என எதற்காக கூட்டம் நடத்தினர்?


latest tamil news



கம்யூனிஸ்ட் உள்ளிட்டகட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தல் செலவுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் அள்ளி கொடுத்தது ஏன் என தெரியாதா? தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 20 கோடி ரூபாய்க்கு மேல் வாரி இரைத்தது எதற்காக? வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தனரே... அதுலஞ்சத்தை ஒழிப்பதற்காகவா? ஆகையால் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை திராவிட கட்சிகள் ஒழித்து விடும் என கனவு கூட காணாதீர்!


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஜூலை-202112:43:13 IST Report Abuse
Bhaskaran அரசியல் ஒரு பெரிய வியாபாரசந்தை ஒரு ரூபாய் செலவுசெய்து நூறு ரூபாயாக சம்பாதிப்பார்கள் நம் அரசியல் வாதிகள்
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
21-ஜூலை-202122:25:08 IST Report Abuse
Baskar தொகுதிக்கு 20 கோடி ஒரு தொகுதில 40000 வோட் , அப்பிடி வெச்சுக்கங்க , 40000500 = 2 கோடி . மீதி 18 கோடி , பிரித்து கொள்ளப்படும் . ஆக எல்லோருக்கும் வெற்றி. தோல்வி என்றால் 20 கோடி நட்டம் . அப்பிடி தான் தோணும் , ஆனா 2 கோடி மட்டும் தான் நட்டம் . மீதி 18 கோடி கட்சிக்கே வந்து விடும் . என்ன கணக்கு கரெக்டா ?
Rate this:
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
21-ஜூலை-202120:51:59 IST Report Abuse
chinnamanibalan அரசியல்வாதிகள் உழைக்காமல் வாழ்வது போல் தாங்களும் உழைக்காமல் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு பெரும்பாலான மக்கள் வந்து விட்டனர். கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியாளர்கள் அடித்த கொள்ளைகளின் தாக்கம் இது. எனவே மக்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை.எல்லா கட்சிகளும் கோடிகளை கொட்டி செலவிட்டுதான் வெற்றி பெற்றுள்ளது. எனவே கோடிகளை கொட்டி செலவு செய்தவர்கள் வட்டியும் முதலுமாக வாய்ப்பு வரும் போது சம்பாதிக்கவே செய்வர். எனவே இந்த நாட்டில் லஞ்சமும் ஊழலும் ஒருபோதும் ஒழியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X