இது உங்கள் இடம் : கனவு கூட காணாதீர்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : கனவு கூட காணாதீர்!

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (48)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு களையெடுக்காமல் எந்த மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. எனவே அவற்றை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வாசகர் ஒருவர் இப்பகுதியில் ஆலோசனை வழங்கிஇருந்தார். நம் அரசியல்வாதிகளை பற்றி இன்னமுமா புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்?



latest tamil news



லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்து கட்டி நல்லாட்சி நடத்துவதற்காகவா 360 கோடி ரூபாயை அள்ளி கொடுத்து, ஓர் ஆலோசகரை நியமித்தனர்? ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 2 கோடி ரூபாய் செலவழித்து, 'ஒன்றிணைவோம்' என எதற்காக கூட்டம் நடத்தினர்?


latest tamil news



கம்யூனிஸ்ட் உள்ளிட்டகட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தல் செலவுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் அள்ளி கொடுத்தது ஏன் என தெரியாதா? தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 20 கோடி ரூபாய்க்கு மேல் வாரி இரைத்தது எதற்காக? வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தனரே... அதுலஞ்சத்தை ஒழிப்பதற்காகவா? ஆகையால் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை திராவிட கட்சிகள் ஒழித்து விடும் என கனவு கூட காணாதீர்!


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X