பாக்.,குக்கு அமெரிக்கா நெருக்குதல்| Dinamalar

பாக்.,குக்கு அமெரிக்கா நெருக்குதல்

Added : ஜூலை 21, 2021
Share
வாஷிங்டன்:'பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதுடன் ஐ.நா. சபையால்தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என நம் அண்டை நாடான பாக். க்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப்.

வாஷிங்டன்:'பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதுடன் ஐ.நா. சபையால்தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என நம் அண்டை நாடான பாக். க்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு கண்காணிக்கிறது.இந்த அமைப்பின் 'கிரே' நிற பட்டியலில் பாக். இடம் பெற்றுள்ளது.இதனால் பாக். கிற்கான நிதி உதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக 27 அம்ச நடவடிக்கைகள் எடுக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டிருந்து.கடந்த மாதம் நடந்த அமைப்பின் கூட்டத்தில் கிரே நிறப் பட்டியலில் இருந்து பாக்.கை நீக்க மறுக்கப்பட்டது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளதாவது:பணிக் குழு அளித்து உள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற பாக். முயற்சி மேற்கொண்டுள்ளதை வரவேற்கிறோம். நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. ஐ.நா. வால் தடை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசார் லஷ்கர் - இ - தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் பாக். நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X