கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் தந்தை இறப்பு: மகனுக்கு ரூ.18 லட்சம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:விபத்தில் இறந்தவரின் மகனுக்கு 18.25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் 65; ஐஸ் நிறுவன உரிமையாளர். 2018 டிசம்பரில் கிளாம்பாக்கத்திலிருந்து வண்டலுார் நோக்கி சைக்கிளில் சென்ற போது அதிவேகமாக வந்த டாடா ஏஸ் ஆட்டோ கோவிந்தன் சைக்கிள் மீது மோதியது. பலத்த

சென்னை:விபத்தில் இறந்தவரின் மகனுக்கு 18.25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் 65; ஐஸ் நிறுவன உரிமையாளர். 2018 டிசம்பரில் கிளாம்பாக்கத்திலிருந்து வண்டலுார் நோக்கி சைக்கிளில் சென்ற போது அதிவேகமாக வந்த டாடா ஏஸ் ஆட்டோ கோவிந்தன் சைக்கிள் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தந்தை இறப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரி கோவிந்தன் மகன் ராஜசேகர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரித்த நீதிபதி பி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் தந்தை இறப்புக்கு டாடா ஏஸ் வாகனத்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது விசாரணையில் தெளிவாகிறது.எனவே மனுதாரருக்கு 18.25 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X