கோயில் பாதுகாப்பு திட்டம் கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் பாதுகாப்பு திட்டம் கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை:அறநிலையத் துறை அலுவலர்களுக்கு கமிஷனர் குமரகுருபரன் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களை புனரமைத்து பாதுகாப்பது மிகவும் அவசியம். திருப்பணி மேற்கொள்வது குறித்து ஐகோர்ட் வாயிலாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.கோயில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கு முன் கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம்

சென்னை:அறநிலையத் துறை அலுவலர்களுக்கு கமிஷனர் குமரகுருபரன் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களை புனரமைத்து பாதுகாப்பது மிகவும் அவசியம். திருப்பணி மேற்கொள்வது குறித்து ஐகோர்ட் வாயிலாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.கோயில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கு முன் கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்க வேண்டும் என கருத்துருவும் வழங்கப்பட்டுள்ளது.

வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் மிகவும் சிதலமடைந்த பழமையான கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்கும் பணிக்கு நிதி வசதி இல்லாத கோயில்களுக்கு கமிஷனர் பொது நல நிதியில் இருந்து வழங்க வேண்டி சார்நிலை அலுவலர்களால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு உதவி வழங்க இணை உதவிக் கமிஷனர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய வழியில் நிதி விடுவித்து பின் கமிஷனருக்கு முன்மொழிவு சமர்ப்பித்து பொதுநல நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X