பொது செய்தி

தமிழ்நாடு

பின்னலாடை என்னும் பறவை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:பின்னலாடை உற்பத்தி துறை, அதிக வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் என வடமாநில தொழிலாளர்களும் அதிகளவில் இந்த துறை சார்ந்து வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.கடந்த காலங்களில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:பின்னலாடை உற்பத்தி துறை, அதிக வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் என வடமாநில தொழிலாளர்களும் அதிகளவில் இந்த துறை சார்ந்து வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.கடந்த காலங்களில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் தொழிலாளர் கிடைத்தனர். ஆனால் தற்போது, 50 சதவீதத்துக்கும்மேல் தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. தொழிலாளர் மிகுந்த பகுதிகளை நோக்கி நிறுவனங்களை கொண்டுசெல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.திருப்பூரை சேர்ந்த சில ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் தங்கள் விரிவாக்க கிளைகளை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது, வங்கதேசம், வியட்நாம், சீனா என வெளிநாடுகள் மட்டும்தான் போட்டியாக உள்ளன.காலப்போக்கில், திருப்பூர் உட்பட தமிழக ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, வெளிமாநிலங்கள் மிகப்பெரிய போட்டியாளராக மாறிவிடும்.தமிழக அரசு, பின்னலாடை தொழிலை மாநிலம் முழுவதும் பரவச் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும். வறட்சியான மாவட்டங்களை தேர்வு செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய, ஜவுளி பூங்காக்களை ஏற்படுத்தவேண்டும். இதற்கு உதாரணமாக, அரசு உதவியுடன், 'டீமா' சங்கம், வேதாரண்யத்தில் 'வேதா ஆயத்த ஆடை பூங்கா' வை நிறுவ உள்ளது.பிற மாநிலங்களை போன்று, தமிழக அரசு சிறப்பு சலுகைகளுடன் கூடிய, தொழில் வளர்ச்சி திட்டங்களை வகுத்து, செயல்படுத்த வேண்டும். இத்தகைய தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலமும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் செயற்கை இழையை கொண்டு, மதிப்பு கூட்டிய பின்னலாடைகளை தயாரிப்பதன் வாயிலாகவும், வெளிமாநிலங்களை நோக்கிய இடம்பெயர்தல் தவிர்க்கப்படும்.தமிழகத்தில் வேலை வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்; கிராமப்புற பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுவர். மாநில பொருளாதாரமும் சிறப்பான வளர்ச்சி பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலமும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் செயற்கை இழையை கொண்டு, மதிப்பு கூட்டிய பின்னலாடைகளை தயாரிப்பதன் வாயிலாகவும், வெளிமாநிலங்களை நோக்கிய இடம்பெயர்தல் தவிர்க்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X