பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர் பணியிடம் நிரப்ப வேண்டுமென எதிர்பார்ப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
அவிநாசி;காலியாக உள்ள துாய்மை பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, துாய்மை பணியாளர்கள் சிலர் கூறியதாவது:பேரூராட்சிகளில் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், அதற்கேற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை. பெரும் பாலான பேரூராட்சிகளில், தினக்கூலி அடிப்படையில் தான் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு,

அவிநாசி;காலியாக உள்ள துாய்மை பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, துாய்மை பணியாளர்கள் சிலர் கூறியதாவது:பேரூராட்சிகளில் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், அதற்கேற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை. பெரும் பாலான பேரூராட்சிகளில், தினக்கூலி அடிப்படையில் தான் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள அவர்கள் தான், கொரோனா சமயத்தில் துாய்மை பணியில், முன்களப் பணியாளர்களாக இருந்து, சுகாதார பணியில் தங்களை முழு அளவில் ஈடுபடுத்திக் கொண்டனர்.பேரூராட்சிகளில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டுகளிலும், துாய்மை பணியில் அவர்களின் பங்களிப்பு தான் அதிகம். சொற்ப வருமானத்தில், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள அவர்களுக்கு, பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், அவ்வப்போது அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி, உதவி செய்து வருகின்றனர்.கடந்த, 10, 15 ஆண்டுகளை கடந்தும் கூட பலரும் தற்காலிக அடிப்படையில் தான் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X