சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவில் இடிப்பு ஆதீனங்கள், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவையில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு, மடாதிபதிகள், ஆதீனங்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர்.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வாராஹி பீடம் மணிகண்ட சுவாமிகள், வெள்ளலுார் ரங்கநாதர் சன்னிதானம் ஜெகன்நாத ஜீயர்
 பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவில் இடிப்பு  ஆதீனங்கள், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு

கோவை:கோவையில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு, மடாதிபதிகள், ஆதீனங்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வாராஹி பீடம் மணிகண்ட சுவாமிகள், வெள்ளலுார் ரங்கநாதர் சன்னிதானம் ஜெகன்நாத ஜீயர் சுவாமிகள், மலுமிச்சம்பட்டி நாகசக்திபீடம் சிவசண்முக சுந்தரபாபுஜி சுவாமிகள், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்ட கோவில்களை அப்புறப்படுத்தக் கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதற்கு எதிராக கோவை சுண்டப்பாளையம் சாலையில், முத்தண்ணன் குளக்கரையோரம் நுாற்றாண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் சில தினங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.குளக்கரைகளில் கோவில் இருப்பது குளங்களுக்கும், மக்களுக்கும் நன்மை. கோவில் இடிக்கப்பட வேண்டும் என்றால், வேறு ஒரு இடம் அமைத்து, கோவிலில் உள்ள சிலை பாலாலயம் செய்து, ஆகம விதிகளின்படி, வேறு பகுதியில் கோவில் அமைத்து அதன் பின் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.இது தொடர்பாக, 2005ல் மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோர்ட் உத்தரவுக்கும், ஆகம விதிமுறைகளுக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டு நெறிமுறைக்கும் எதிராக, மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நுாற்றாண்டு பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவில் கோபுரம் முதல், கருவறையில் உள்ள அம்மன் வரை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது, முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை. \

கோவில்கள் இடிக்கப்படுவது, அரசுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்காது. கோவில் இடிக்கப்பட்டதை, மாற்று மதத்தினரே கண்டித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சிறப்பு வழிபாடுகோவை முத்தண்ணன் குளக்கரையில் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட நுாற்றாண்டு பழமையான கோவில் அமைந்திருந்த இடத்தை மடாதிபதிகள் பார்வையிட்டனர்.

அப்போது இ.ம.க., தலைவர் அர்ஜுன் சம்பத், ஆர்ஷ வித்யா குருகுலம் ஸதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், ககதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர், பங்கேற்று கருவறை அமைந்திருந்த இடத்தில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202113:33:21 IST Report Abuse
balaji Radhakrishnan அம்மன் கோவிலை இடித்த மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு தொடர வேண்டும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் செலவில் புது கோவில் கட்டி கும்பாபிஷேக நடத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X