பொது செய்தி

தமிழ்நாடு

'பாகுபலி' வலிமை பெற முனைப்பு!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், தினமும் தொற்று நுாற்றுக்கும் மேற்பட்டோரை பாதித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் பிரதானமானது எனினும், தடுப்பூசியே, தொற்றைத் தடுக்கும் பேராயுதமாக இருக்கிறது.மாவட்டத்தில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை, ஆறு லட்சத்தை நெருங்குகிறது. தொழிலாளர் பலர், தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நிறுவனங்களே முன்வந்து, இதில், ஆர்வம்

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், தினமும் தொற்று நுாற்றுக்கும் மேற்பட்டோரை பாதித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் பிரதானமானது எனினும், தடுப்பூசியே, தொற்றைத் தடுக்கும் பேராயுதமாக இருக்கிறது.மாவட்டத்தில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை, ஆறு லட்சத்தை நெருங்குகிறது. தொழிலாளர் பலர், தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நிறுவனங்களே முன்வந்து, இதில், ஆர்வம் காட்டி வருகின்றன.நேற்று துவங்கிய பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, 'கொரோனாவை வெல்ல அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்; தடுப்பூசி மூலமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். முன்னெச்சரிக்கை நட வடிக்கையை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.தடுப்பூசி செலுத்திக்கொண்டால், பாகுபலியாக மாறலாம். நாட்டில், 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாகுபலி போன்று வலிமையாகியுள்ளனர்'' என்று பேட்டியளித்தார்.திருப்பூர் தொழில்முனைவோர் கூறுகையில், ''பின்னலாடைத் தொழிலுக்கு முதுகெலும்பாக தொழிலாளர்கள் உள்ளனர்; அவர்களுக்குத் தொற்று வராமல் பாதுகாப்பதன் மூலம், உற்பத்தி சங்கிலி தடைபடாமல் இருக்கும். இதனால்தான், தடுப்பூசி செலுத்துவதில், நிறுவனங்களும் அக்கறையுடன் உள்ளன.குறு, சிறு நிறுவனத் தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் தேவை. அனைத்து தொழிலாளருக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டால், பின்னலாடைத்துறையும் வலிமையா னதாக 'பாகுபலி' போன்றுமாறும்.திருப்பூர் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து பொதுமக்களும் அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்; அப்போதுதான் தொற்று இல்லா திருப்பூர் சாத்தியமாகும்; மூன்றாவது அலை குறித்து அச்சம் இருக்காது'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X