முறைகேடான நியமனம் ஆவினில் ரத்து: நாசர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முறைகேடான நியமனம் ஆவினில் ரத்து: நாசர்

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:''ஆவின் நிறுவனத்தில், முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்ய, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தப்படும்,'' என, பால் வளத் துறை அமைச்சர் நாசர் கூறினார்.அவர் கூறியதாவது:ஆவின் பொருட்களை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பின், விற்பனை அதிகரித்துள்ளது. பால்

சென்னை:''ஆவின் நிறுவனத்தில், முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்ய, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தப்படும்,'' என, பால் வளத் துறை அமைச்சர் நாசர் கூறினார்.

அவர் கூறியதாவது:ஆவின் பொருட்களை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பின், விற்பனை அதிகரித்துள்ளது. பால் கொள்முதலை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக, 636 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முறைகேடு கண்டறியப்பட்டதால், அந்த பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வு நடத்தப்பட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X