சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 'ரெய்டு'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.32 ஆயிரம் சிக்கியது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று இரவு, 7:00 மணிக்கு, டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில்,இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்ரங்கநாதன் உட்பட
 கோத்தகிரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 'ரெய்டு'

கோத்தகிரி:கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.32 ஆயிரம் சிக்கியது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று இரவு, 7:00 மணிக்கு, டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில்,இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்ரங்கநாதன் உட்பட எட்டுபேர், தாலுகா அலுவலகத்திற்குள் நுழைந்து, இரண்டு நுழைவுவாயில்களை அடைத்தனர். வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள், தரகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, தலைமையிடத்து துணை தாசில்தார், மண்டல துணை தாசில்தார் அறைகளுக்கு சென்று, முதற்கட்டமாக கோப்புகளை சோதனை செய்து, கணக்கில் வராத, 32 ஆயிரத்து 430 ரூபாய் பறிமுதல் செய்தனர். இரவிலும் தொடர்ந்து விசாரணை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X