யாருக்கும் பயனின்றி வீசப்பட்ட பழங்கள்: விலை கிடைக்காத அவலம்:கவலைப்படும் பொதுமக்கள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பல்லடம்;பல்லடம் அருகே, பி.ஏ.பி., வாய்க்காலில், பழக்குவியல் கிடந்தது, பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.நோய் தாக்குதல், உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், ரோட்டோரங்களில் காய்கறிகள் வீசி செல்வதை வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோல், பல கிலோ எடையுள்ள கொய்யா உட்பட பல பழங்கள், அறிவொளி நகர் பகுதியில் உள்ள பி.ஏ.பி., வாய்க்காலில்

பல்லடம்;பல்லடம் அருகே, பி.ஏ.பி., வாய்க்காலில், பழக்குவியல் கிடந்தது, பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.நோய் தாக்குதல், உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், ரோட்டோரங்களில் காய்கறிகள் வீசி செல்வதை வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோல், பல கிலோ எடையுள்ள கொய்யா உட்பட பல பழங்கள், அறிவொளி நகர் பகுதியில் உள்ள பி.ஏ.பி., வாய்க்காலில் வீசப்பட்டன.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யும் சிலர் இதுபோன்று காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாய்க்காலில் வீசி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வகையில், பல கிலோ எடையுள்ள கொய்யா மற்றும் மாம்பழங்களை வாய்க்காலில் வீசியுள்ளனர்.பழங்கள் அனைத்தும் நல்ல நிலையில்தான் உள்ளன. எதற்காக வீசி சென்றார்கள் என தெரியவில்லை. கடந்த வாரத்தில் மாதுளை, ஆரஞ்சு பழங்களை கொட்டி சென்றனர். யாருக்கும் பயனின்றி, வீசி செல்வது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X