பொது செய்தி

இந்தியா

தலைநிமிர்ந்த மங்கையரை மனதில் கொண்டு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
'மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்' என்பதற்கேற்ப, தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அவர்கள் துவக்கி வைத்தது தான், இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது.அவ்வாறு, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களை கவுரவிக்கும் விதமாக, ஜெய்வாபாய்
 தலைநிமிர்ந்த மங்கையரை மனதில் கொண்டு

'மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்' என்பதற்கேற்ப, தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அவர்கள் துவக்கி வைத்தது தான், இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது.

அவ்வாறு, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களை கவுரவிக்கும் விதமாக, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர்களில் சாதித்த பெண்களின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது, காண்போரை கவர்ந்திழுந்தும் வருகிறது.பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது:சாதாரண குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களை கடந்து சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும், பல துறைகளில் முன்னேறி சேவை புரிந்த பெண்கள் ஏராளம்.

இந்த தலைமுறை பெண்களுக்கு இந்த உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் புகட்ட வேண்டியது அவசியமான ஒன்று.ஆசியாவிலே அதிக மாணவிகளை கொண்ட பள்ளியாக திகழ்கிறது இப்பள்ளி. இங்கு படிக்கும் மாணவியர் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இம்முயற்சி எடுத்துள்ளோம். ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்களை திரட்டி அவர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் பற்றிய சிறுகுறிப்பை சுவர்களில் ஒட்டியுள்ளோம்.

மகாராஷ்டிராவில், கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கும், சமூக கொடுமைகளுக்கும் எதிராக போராடிய முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே. பள்ளிக்கு செல்லும் போது இரண்டு புடவைகளை எடுத்து செல்வாராம்.தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே வழி நெடுகிலும் சேற்றையும், சாணத்தையும், மண்ணையும் மாறி மாறி அவர் மீது வீசுவார்களாம்.

இக்கதை எத்தனை பேருக்கும் தெரியும். தற்போது மாணவியர்கள் அவரை பற்றி தேடி படிக்க ஆரம்பிக்கின்றனர். இதுபோன்று, ஜான்சி ராணி, முத்துலட்சுமி அம்மையார், பி.டி.,உஷா, கல்பனா சாவ்லா என பலரது படங்களும் இடம்பெற்றுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X