பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சேர்க்கை விபரம் எப்படி; நாளை ஆய்வு கூட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில், சேர்க்கை தொடர்பான விவரங்கள் பெற, நாளை வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், ஆன்லைன் மூலம் நடக்கிறது.தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், தொடக்க கல்வி இயக்குனரகம் மூலம், கண்காணிக்கப்பட்டு ஒழுங்குப்படுத்தப்படுகிறது.புதிய கல்வியாண்டு துவங்கிய நிலையில், மாணவர் சேர்க்கை பணிகள்

கோவை:தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில், சேர்க்கை தொடர்பான விவரங்கள் பெற, நாளை வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், ஆன்லைன் மூலம் நடக்கிறது.தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், தொடக்க கல்வி இயக்குனரகம் மூலம், கண்காணிக்கப்பட்டு ஒழுங்குப்படுத்தப்படுகிறது.புதிய கல்வியாண்டு துவங்கிய நிலையில், மாணவர் சேர்க்கை பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. சில பள்ளிகள், சேர்க்கை முடிந்ததாக, அறிவிப்பு பலகை வைக்குமளவுக்கு, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர், கட்டாயம் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஆவண செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சேர்க்கை தொடர்பான பணிகளை, ஆய்வு செய்யும் வகையில், நாளை மாவட்ட வாரியாக உள்ள, வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், ஆன்லைன் மூலம் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, இக்கூட்டத்தில் பங்கேற்க, ஏற்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 872 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் 255 அரசு, அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, சேர்க்கை சார்ந்த விபரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X