இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021
Share
தமிழக நிகழ்வுகள்1. தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரள வாலிபர் கைதுகூடலுார் : தேனி மாவட்டம் கூடலுார் அருகே எல்லைப்பகுதியான செல்லார்கோயில் மெட்டில் தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்த சோஜன் 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் அருகே தமிழக-கேரள எல்லை செல்லார்கோயில் மெட்டு வனப்பகுதியில் ஜூன் 30 இரவில் வனவிலங்கு வேட்டையாட வந்த கேரள

தமிழக நிகழ்வுகள்
1. தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரள வாலிபர் கைது
கூடலுார் : தேனி மாவட்டம் கூடலுார் அருகே எல்லைப்பகுதியான செல்லார்கோயில் மெட்டில் தமிழக வனக்காவலரை தாக்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்த சோஜன் 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.latest tamil newsகூடலுார் அருகே தமிழக-கேரள எல்லை செல்லார்கோயில் மெட்டு வனப்பகுதியில் ஜூன் 30 இரவில் வனவிலங்கு வேட்டையாட வந்த கேரள கும்பலுக்கும் தமிழக வனத்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. நாட்டு துப்பாக்கியால் மேல்நோக்கி சுட்ட அக்கும்பல் வனக்காவலர் காஜாமைதீனை 41, அரிவாளால் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியது. வனத்துறையினர் கூடலுார் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தேடினர். கேரளா ஓடைமேடை சேர்ந்த சோஜன், ஓசூருக்கு தப்பி செல்ல லோயர்கேம்ப் வழியாக சென்றபோது இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நால்வரை தேடுகின்றனர்.

2. தொண்டி அருகே 350 கிலோ மஞ்சள் பறிமுதல்: 4 பேர் கைது
திருவாடானை: இலங்கைக்கு கடத்த தொண்டி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசங்கலிமடம் கடற்கரையில் 350 கிலோ எடையுள்ள ஏழு மஞ்சள் மூடைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. தேவிபட்டினம் மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தொண்டி எஸ்.ஐ. அய்யனார், இளையராஜா ஆகியோர் ரோந்து சென்ற போது அந்த மூடைகளை கைப்பற்றினர்.


latest tamil newsதொண்டி கலந்தர் அலி 28, கலந்தர் ஆசிக் 29, கலந்தர் மைதீன் 25, ரகுமான் 27, ஆகியோரை போலீசார் கைது செய்து, ஒரு ஆட்டோ, ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மதிப்பு ரூ.16 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். தேவிபட்டினம் கடற்கரையோரத்தில் அப்துல் வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டு இருந்தன. ராமநாதபுரம் உதவி வனக்காப்பாளர் கணேசலிங்கம் தலைமையிலான அலுவலர்கள், 250 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

3. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 35 சவரன், 2 கிலோ வெள்ளி திருட்டு
நங்கநல்லுார் : ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில், பூட்டு உடைத்து 35 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், 70 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

சென்னை, நங்கநல்லுார், அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 61; வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அண்ணா நகரில் உள்ள மைத்துனர் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க, குடும்பத்துடன் சென்றிருந்தார். வீடு திரும்பிய போது, வீட்டின் 'கிரில் கேட்' பூட்டு மற்றும் முன்பக்க கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, அறையில் இருந்த இரண்டு பீரோ லாக்கர்களை உடைத்து, 35 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


Advertisement


4. கிரிப்டோ கரன்சி கொள்ளையில் இருவர் கைது
விருதுநகர் : கிரிப்டோ கரன்சியை கமிஷன் அடிப்படையில் ஆன்லைனில் வியாபாரம் செய்து வருபவர் மதுரை விராட்டிப்பத்தை சேர்ந்த சரவணன்.

சிவகாசி தேவர் குளத்தில் உள்ள வீட்டிற்கு வந்த இவரை மதுரை செல்லும் வழியில் ஆமத்துார் அருகில் காரில் வந்த 6 பேர் கும்பல் வழிமறித்து கடத்தி சென்றது. குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்று சரவணனிடமிருந்த ரூ. 13 லட்சம் மதிப்பு கிரிப்டோ கரன்சி, எட்டரை பவுன் நகையை பறித்தது.


latest tamil newsஆமத்துார் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தென்காசியை சேர்ந்த ராம்கனகசபாபதி 51, பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆறுமுகசாமி 42 ஆகியோரை கைது செய்தனர். விசாரித்ததில் , சரவணனிடம் பிசினஸ் ஏஜன்டாக பணிபுரிந்தபோது ஆறுமுகசாமி வழங்கிய ரூ. 60 லட்சத்தை சரவணன் தராமல் இழுத்தடித்துள்ளார். அதை வசூலிக்கவே கடத்தியதாக ஆறுமுகசாமி தெரிவித்தார். மீதமுள்ள நான்கு பேரை போலீசார் தேடுகின்றனர்.

5. 14 வயது சிறுமி பலாத்காரம் 'போக்சோ'வில் 6 பேர் கைது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியை பெற்றோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


latest tamil newsபோலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.முதலில், சிறுமியை 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்துள்ளான். இதை தெரிந்து கொண்ட மகரஜோதி, 31, என்பவர் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுபோன்று, சிறுமியை மிரட்டி, 19, வயதுடைய மூவர், 16 வயது சிறுவன் ஆகியோரும் பலாத்காரம் செய்துள்ளனர். 'போக்சோ' சட்டத்தில் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தொழிலாளி கைது

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம், 20; கட்டட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே வசித்த 10ம் வகுப்பு மாணவியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் தாய் புகாரின்படி, காரமடை போலீசார், விக்ரமை கைது செய்தனர்.

இந்தியாவில் குற்றம் :
துப்பாக்கியால் வந்த வினை
காசியபாத்: உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டம் சாணாவாலி கிராமத்தை சேர்ந்த ஹிர்டிக் மாலிக் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'வீடியோ'வில் இரு துப்பாக்கிகளை கைகளில் பிடித்தபடி தான் மிகப்பெரிய தாதாவாக விரும்புவதாக கூறினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒன்று பொம்மை துப்பாக்கி.


latest tamil newsஉலக நடப்பு
பாக்.,குக்கு அமெரிக்கா நெருக்குதல்
வாஷிங்டன் : 'பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதுடன் ஐ.நா. சபையால்தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என நம் அண்டை நாடான பாக். க்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு கண்காணிக்கிறது.இந்த அமைப்பின் 'கிரே' நிற பட்டியலில் பாக். இடம் பெற்றுள்ளது.இதனால் பாக். கிற்கான நிதி உதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக 27 அம்ச நடவடிக்கைகள் எடுக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டிருந்து.கடந்த மாதம் நடந்த அமைப்பின் கூட்டத்தில் கிரே நிறப் பட்டியலில் இருந்து பாக்.கை நீக்க மறுக்கப்பட்டது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளதாவது:பணிக் குழு அளித்து உள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற பாக். முயற்சி மேற்கொண்டுள்ளதை வரவேற்கிறோம். நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. ஐ.நா. வால் தடை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசார் லஷ்கர் - இ - தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துநிபந்தனைகளையும் பாக். நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X