அரசியல் செய்தி

தமிழ்நாடு

1:10:100 - பா.ஜ., இலக்கு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு மேயர் 10 நகராட்சித் தலைவர்கள் 100 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளை பிடிப்பது என்ற இலக்கை அடைய பா.ஜ. புது வியூகம் அமைக்க உள்ளது.'சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது' என முன்னள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். 'பா.ஜ. தோல்விக்கு அ.தி.மு.க. எடுத்த சில தறவான முடிவுகளே


சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு மேயர் 10 நகராட்சித் தலைவர்கள் 100 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளை பிடிப்பது என்ற இலக்கை அடைய பா.ஜ. புது வியூகம் அமைக்க உள்ளது.



latest tamil news




'சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது' என முன்னள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். 'பா.ஜ. தோல்விக்கு அ.தி.மு.க. எடுத்த சில தறவான முடிவுகளே காரணம்' என தமிழக பா.ஜ. தரப்பில் பதிலடி தரப்பட்டது.இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் விமர்சித்த வந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அ.தி.மு.க. இடம் பெறவில்லை. இந்நிலையில் வரும் செப்டம்பரில் நடக்க உள்ள 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் டிசம்பரில் நடைபெறவுள்ள நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ. நிலைப்பாடு குறித்து டில்லி மேலிடத்தில் விவாதிக்கப்பட்டது.

அதில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ. தனித்து போட்டியிட்டு ஒரு மாநகராட்சி மேயர் 10 நகராட்சித் தலைவர்கள் 100 வார்டு கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளை பிடிப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தனித்து போட்டியிடுவதால் பா.ஜ. சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கட்சியினருக்கு கிடைக்கிறது. சொந்த செல்வாக்கு பெற்ற கட்சியினர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.கட்சியின் சின்னமான தாமரையை தமிழகம் முழுதும் பட்டி தொட்டி வரை விளம்பரப்படுத்தி கட்சியை கிராம அளவில் பலப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.


latest tamil news



கட்சிக்கு இளம் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது சுற்றுப்பயணம் அவரது அரசியல் அணுகுமுறை செயல்பாடுகள் வாயிலாக பா.ஜ. பலத்தை நிரூபிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடக்கும்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பா.ஜ.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.எனவே அ.தி.மு.க. கூட்டணியை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய பா.ஜ., புது வியூகம் அமைக்க உள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிரூபர்-

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Kumar - Salem,இந்தியா
21-ஜூலை-202118:06:48 IST Report Abuse
Suresh Kumar இப்போது நிறையபேர் பிஜேபி பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதுவே ஒரு முன்னேற்றம்தான். வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-ஜூலை-202116:16:34 IST Report Abuse
S. Narayanan நீட் தேர்வு ரத்து பெட்ரோ விலை குறைப்பு மற்றும் நகை கடன் பெண்கள் இலவச பஸ் பயணம் என்று பல வகைகளில் திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டது. அதனால் திமுக வும் அ தி மு க வும் மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டார்கள். அண்ணாமலை மற்றும் முருகன் இளம் வயதினர் பி ஜே பி வெற்றி பெற செய்வார்கள் என்பது நிச்சயம்.
Rate this:
Cancel
Irudayaraj - Chennai,இந்தியா
21-ஜூலை-202114:47:12 IST Report Abuse
Irudayaraj இந்த உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவா நாங்களா ன்னுஒரு கை பார்த்து விடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X