போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஆக்கிரமிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
காந்திமாநகரில் கால்நடைகளால் 'கசகசா'சாலையை செப்பனிடணும்நல்லாம்பாளையம் - ஜி.என்.மில் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- ராமமூர்த்தி, ஜி.என்.மில்.வாய்க்காலில் தேங்குது கழிவுகிருஷ்ணாம்பதி குளத்துக்கு செல்லும் வாய்க்காலில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த வாய்க்காலில் கழிவுநீரை திருப்பி விடுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

காந்திமாநகரில் கால்நடைகளால் 'கசகசா'

சாலையை செப்பனிடணும்நல்லாம்பாளையம் - ஜி.என்.மில் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- ராமமூர்த்தி, ஜி.என்.மில்.

வாய்க்காலில் தேங்குது கழிவுகிருஷ்ணாம்பதி குளத்துக்கு செல்லும் வாய்க்காலில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த வாய்க்காலில் கழிவுநீரை திருப்பி விடுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வெங்கடாசலம், தொண்டாமுத்துார்.

கழிவு மணல் மேட்டை அகற்றணும்கவுண்டம்பாளையம், சக்தி நகரில் உள்ள, பொதுக்கழிப்பிடம் அருகில், சாக்கடை கால்வாயை அடைத்த நிலையில், கழிவு மணல் கொட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும்.- சிவபாண்டியன், சக்தி நகர்.

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பிடம்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார் - வெள்ளலுார் ரோட்டில் உள்ள, கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள, பொதுக்கழிப்பிடம், பராமரிப்பின்றி உள்ளது; இதை பயன்படுத்த முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.- முத்துகுமார், கோணவாய்க்கால் பாளையம்.

சாலையை சீராக்கணும்பாலக்காடு ரோடு, மதுக்கரை குவாரி ஆபீஸ் சிக்னல் அருகில், ரோட்டின் நடுவில் குடிநீர் குழாய் பழுது பார்க்க குழி தோண்டப்பட்டது. பணி முடிந்து நீண்ட நாட்களாகியும், சாலையை சீரமைக்காமல் விட்டு விட்டனர். வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- ஞானமூர்த்தி, குவாரி ஆபீஸ்.

ஆக்கிரமிப்பு வாகனங்களால் அவதிபுலியகுளம், தாமு நகர் பிரதான சாலையில் உள்ள, மருத்துவமனை முன் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- வெங்கடசுப்பு, தாமு நகர்.

பாலாஜி கார்டன் செல்ல சிரமம்மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டர் மில் அருகே, சுப்ரமணியம்பாளையம், பாலாஜி கார்டன் முதல் குறுக்கு வீதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- கிருஷ்ணா, பாலாஜி கார்டன்.

துாய்மை பணியாளர்கள் வருவதில்லைசெல்வபுரம், முத்துசாமி காலனி, எஸ்.ஏ.கார்டன் பகுதிக்கு, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், இப்பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது; சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- பாலமுருகன், முத்துசாமி காலனி.

சாக்கடைக்கு சிலாப் வேண்டும்தடாகம் ரோடு, சர்ச் எதிரே, லாலி ரோடு சிக்னல் அருகில், சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்துள்ளது; இங்கு சிலாப் அமைக்க வேண்டும்.- மாலினி, ஆர்.எஸ்.புரம்.

கால்நடைகளால் இடையூறுமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, காந்திமாநகர் போலீஸ் ஸ்டேஷன் அருகில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, கால்நடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- பாஸ்கரன், காந்திமாநகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புகணபதி, மணியகாரன் பாளையம், அசோக் நகர் - 2வது அவென்யூவில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.- விஜயா, அசோக் நகர்.

ஆபத்தான மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 63வதுவார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், போயர் வீதியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்து, விழும் நிலையில் உள்ளது; மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ராமு, போயர் வீதி.

கழிவுநீர் செல்ல வழியில்லைமாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட, ஜி.கே.டி.நகர், பாப்பநாயக்கன்பாளையம் பிரதான வீதியில், கழிவுநீர் சீராக செல்ல வழியின்றி, சாக்கடை கால்வாய் முழுவதும் குப்பை நிறைந்துள்ளது. இக்கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.- செந்தில்குமார், ஜி.கே.டி.நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X