பொது செய்தி

தமிழ்நாடு

ேஜ.இ.இ., நுழைவு தேர்வு: 'நீட்' போல் கடும் சோதனை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் என்.ஐ.டி., ஐ.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்ப பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான, மூன்றாம் கட்ட தேசிய நுழைவுத் தேர்வு, ேஜ.இ.இ., மெயின் (Joint Entrance Examination) தொண்டாமுத்துாரில் உள்ள ரங்கநாதன் இன்ஜினியரிங் கல்லுாரியில் நேற்று நடந்தது.காலை, 9:00 முதல், 12:00 மணி வரையும், பிற்பகல், 3:00 முதல், 6:00 மணி வரையும் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் தேர்வில், 720 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு
 ேஜ.இ.இ., நுழைவு தேர்வு: 'நீட்' போல் கடும் சோதனை

கோவை:கோவையில் என்.ஐ.டி., ஐ.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்ப பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான, மூன்றாம் கட்ட தேசிய நுழைவுத் தேர்வு, ேஜ.இ.இ., மெயின் (Joint Entrance Examination) தொண்டாமுத்துாரில் உள்ள ரங்கநாதன் இன்ஜினியரிங் கல்லுாரியில் நேற்று நடந்தது.காலை, 9:00 முதல், 12:00 மணி வரையும், பிற்பகல், 3:00 முதல், 6:00 மணி வரையும் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் தேர்வில், 720 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுத வந்த மாணவர்கள், வரிசையில் நிற்க வைத்து, கடுமையான பரிசோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.ஹால்டிக்கெட் மற்றும் ஆதார் அட்டை ஒரிஜினல் இரண்டையும் தவிர, வேறு எதையும் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் அணிந்து வந்த கம்மல், வளையல், சடை மாட்டி, துப்பட்டா உள்ளிட்ட எதையும் அணிந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.தேர்வுக்கு வந்த பலர், ஒரிஜினல் ஆதார் அட்டை கொண்டு வராமல், கலர் ஜெராக்ஸ் அட்டையை கொண்டு வந்திருந்தனர்.அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அதனால் பலர், தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X