அரசியல் செய்தி

தமிழ்நாடு

1.32 கோடி பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் தகவல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:''தமிழகத்தில் இதுவரை, 1.32 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,'' என, சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.கே.ஜி., மருத்துவ அறக்கட்டளை மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி அறக்கட்டளை சார்பில், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாம் மூலம், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு லட்சமாவது நபருக்கு, தடுப்பூசி போடும் நிகழ்வு, நேற்று

கோவை:''தமிழகத்தில் இதுவரை, 1.32 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,'' என, சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.கே.ஜி., மருத்துவ அறக்கட்டளை மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி அறக்கட்டளை சார்பில், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாம் மூலம், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு லட்சமாவது நபருக்கு, தடுப்பூசி போடும் நிகழ்வு, நேற்று கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவன வளாகத்தில் நடந்நது. தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், '' தமிழகத்தில் இதுவரை, 1.32 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் மட்டும், 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளின் சி.எஸ்.ஆர்., பங்களிப்பு மூலம், ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், கே.ஜி., மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்களின் தலைவர் அசோக் பக்தவத்சலம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X