சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான விதிமுறையை மீறி கட்டியதால் மாநகராட்சி மருத்துவமனை சுவர் இடிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கான கூடுதல் கட்டடத்தை, கட்டுமான விதிமுறையை மீறி கட்டியதால், ஒரு பக்க சுவர் இடிக்கப்பட்டது.சிங்காநல்லுாரில் உள்ள மாநகராட்சி நகர் நல மையத்தில், அதன் அருகாமையில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. குறுக்கும் நெடுக்குமாக அளவீடு செய்தபோது, ஒரு சுவரின் அகலம் குறைவாக இருந்தது. அருகாமையில் உள்ள கட்டடத்தின் சுவருக்கும், புதிதாக

கோவை:கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கான கூடுதல் கட்டடத்தை, கட்டுமான விதிமுறையை மீறி கட்டியதால், ஒரு பக்க சுவர் இடிக்கப்பட்டது.சிங்காநல்லுாரில் உள்ள மாநகராட்சி நகர் நல மையத்தில், அதன் அருகாமையில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. குறுக்கும் நெடுக்குமாக அளவீடு செய்தபோது, ஒரு சுவரின் அகலம் குறைவாக இருந்தது. அருகாமையில் உள்ள கட்டடத்தின் சுவருக்கும், புதிதாக கட்டும் சுவருக்கும், கட்டுமான விதிகளின் படி, போதிய இடைவெளி விடாமல், கட்டுமான பணி மேற்கொள்வது கண்டறியப்பட்டது.சுவர் கட்டப்பட்டால், பழைய கட்டடத்தில் ஜன்னல் திறக்க முடியாத சூழல் இருந்தது. ஜன்னலை நிரந்தரமாக மூடினால், மருத்துவமனைக்குள் காற்றோட்ட வசதி தடைபடும். தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், மீட்பதற்கும் சிரமமான சூழல் ஏற்படும். கட்டுமான விதிமுறைகளை மீறி, கூடுதல் கட்டடம் கட்டுவதை, மாநகராட்சி கமிஷனர் கண்டுபிடித்தார்.மருத்துவமனை கட்டடங்களை கட்டுவதற்கென, பிரத்யேகமாக வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பொதுப்பணித்துறையில் இதற்கென தனிப்பிரிவு செயல்படுகிறது. ஆனால், மாநகராட்சியில் பொறியியல் பிரிவினரே கவனிக்கின்றனர். ஆனால், அத்தகைய விதிமுறையை பின்பற்றுவதில்லை.பொறியியல் பிரிவினரிடம் விளக்கம் கேட்டதற்கு, முந்தைய ஆட்சியாளர்களை கூறி, தப்பிக்கப் பார்த்தனர். அலுவலர்களை கண்டித்த அவர், அச்சுவரை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி, அச்சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X