அழிவின் பிடியில் பேரிக்காய் விவசாயம்| Dinamalar

அழிவின் பிடியில் பேரிக்காய் விவசாயம்

Added : ஜூலை 21, 2021
Share
குன்னுார்:குன்னுாரில் பேரி சீசன் களைகட்டிய போதும், விற்பனை இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், ஜூன், ஜூலை, ஆக., மாதங்களில், பேரிக்காய் சீசன் களை கட்டும். சாம்பல் பேரி, வால் பேரி, கத்தி பேரி உட்பட, 7 வகையான பேரிக்காய்களை, விவசாயிகள், தோட்டக்கலை துறையினர் சாகுபடி செய்கின்றனர்.ஜூன் முதல் ஆக., வரை , சீசனாக உள்ள பேரிக்காய் மரங்களில்
 அழிவின் பிடியில் பேரிக்காய் விவசாயம்

குன்னுார்:குன்னுாரில் பேரி சீசன் களைகட்டிய போதும், விற்பனை இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், ஜூன், ஜூலை, ஆக., மாதங்களில், பேரிக்காய் சீசன் களை கட்டும். சாம்பல் பேரி, வால் பேரி, கத்தி பேரி உட்பட, 7 வகையான பேரிக்காய்களை, விவசாயிகள், தோட்டக்கலை துறையினர் சாகுபடி செய்கின்றனர்.ஜூன் முதல் ஆக., வரை , சீசனாக உள்ள பேரிக்காய் மரங்களில் தற்போது காய்கள் காய்த்துள்ளன.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு பாதிப்பாலும், பேரியை ஆர்வமுடன் வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள் இல்லாததாலும் பேரிக்காய்கள் விற்பனையில்லாமலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.குன்னுார் பழ வியாபாரி கோபி கூறுகையில்,''கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 2 முதல் 3 டன்கள் வரை பேரி, விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். தற்போது, ஆண்டிற்கு 10 டன் மட்டுமே செல்கிறது. பல இடங்களிலும் குரங்கு, கரடி, காட்டெருமைகளாலும், பேரி விவசாயம் பாதித்துள்ளது. புதிய நாற்று நடவு செய்தாலும் விலங்குகளால் பாதுகாப்பு இல்லை,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X