பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய வேளாண் திட்டத்தில் இயற்கை விவசாயம்: 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஊட்டி;நீலகிரியில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள, 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நீலகிரியின், சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த மூன்று ஆண்டுக்கு முன், இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அதற்கான நடைமுறைகளை கடைப்பிடித்து இயற்கை விவசாயம் மேற்கொள்வதை தோட்டக்கலை துறையினர் உறுதிப்படுத்தி
 தேசிய வேளாண் திட்டத்தில் இயற்கை விவசாயம்: 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயம்

ஊட்டி;நீலகிரியில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள, 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நீலகிரியின், சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த மூன்று ஆண்டுக்கு முன், இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அதற்கான நடைமுறைகளை கடைப்பிடித்து இயற்கை விவசாயம் மேற்கொள்வதை தோட்டக்கலை துறையினர் உறுதிப்படுத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும், 50 சதவீதம் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிவருவதை தோட்டக்கலை துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.விவசாயிகளின் நலன் கருதி, மத்திய, மாநில அரசு, 50 முதல் 100 சதவீதம் வரை, வேளாண்மை திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரியின், இயற்கை விவசாயத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நடப்பாண்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம், 'உருளைக் கிழங்கு, கேரட் மற்றும் உயர் ரக காய்கறி,' என, இயற்கை சாகுபடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக, 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில்,'' நீலகிரியை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற, அரசு திட்டம் வகுத்துள்ளது. தற்போது அதன் பணிகள் வேகம் பிடித்துள்ளது. முதற்கட்டமாக, ஊட்டி, முத்தோரை, பாலாடா உட்பட சில பகுதிகளில், 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X