பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் பிரிவு இல்லாத அரசு பள்ளிகள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவு இல்லாததால், மாணவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.நீலகிரியில், குன்னுார், கூடலுார் என செயல்படும் இரு கல்வி மாவட்டங்களில், 150 பள்ளிகள் உள்ளன. அதில், குன்னுார், கோத்தகிரி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.குன்னுார், கோத்தகிரியில், 26

குன்னுார்:குன்னுார் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவு இல்லாததால், மாணவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.நீலகிரியில், குன்னுார், கூடலுார் என செயல்படும் இரு கல்வி மாவட்டங்களில், 150 பள்ளிகள் உள்ளன. அதில், குன்னுார், கோத்தகிரி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.குன்னுார், கோத்தகிரியில், 26 அரசு மேல்நிலைபள்ளிகள் இருந்தும், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கு முக்கியத்துவம் பெற்ற அறிவியல் பாடப்பிரிவு, பெரும்பாலான அரசு பள்ளிகளில் இல்லை. கக்குச்சி உட்பட ஓரிரு அரசு பள்ளிகளில் இருந்தாலும், குன்னுாரில், எந்த பள்ளியிலும் இல்லை. இதனால், ஏழை மாணவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில்,''அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, நீட் தேர்வு மற்றும் உயர்கல்வி பயில சலுகைகள் இருந்தும், அறிவியல் பாடப்பிரிவு இல்லாததால் பயனில்லாமல் போகிறது,'' என்றார்.குன்னுார் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் கூறுகையில்,''இதற்கான விபரங்கள் தயார் செய்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X