பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணி தொட்டி தேடி வந்த...! ரயில் பாதையில் டேரா; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையம் ரோட்டில் ரயில்பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோட்டில் ரயில்பாதை அருகே, 30 அடி துாரத்தில் எண்.2213 மதுபானக்கடை உள்ளது. கடந்த மாதம் வரை, கோவை - மேட்டுப்பாளையம்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையம் ரோட்டில் ரயில்பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோட்டில் ரயில்பாதை அருகே, 30 அடி துாரத்தில் எண்.2213 மதுபானக்கடை உள்ளது. கடந்த மாதம் வரை, கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயில், தினசரி பத்து முறை இந்த ரயில்பாதையில் இயங்கி வந்தது. இது தவிர, கூட்ஸ் ரயில்களும் அவ்வப்போது சென்று வருகின்றன.ரயில்பாதை அருகே உள்ள டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்களை வாங்கும் 'குடி'மகன்கள் பகல், இரவு நேரங்களில் ரயில் பாதையில் அமர்ந்து, ஆனந்தமாக மது அருந்துகின்றனர். இதுபோன்ற சமயங்களில், அசம்பாவிதம் ஏற்படுகிறது.இந்த மதுபானக்கடை அமைக்கப்பட்ட பிறகு இதே பகுதியில் இதுவரை, 7 பேர் ரயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர். டாஸ்மாக் அருகே உள்ள மதுபானக்கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிளிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் மூர்த்தி கூறியதாவது:இந்த மதுபானக்கடை மட்டுமல்லாமல், பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என, சில ஆண்டுகளுக்கு முன், பிளிச்சி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான நகலை கலெக்டர், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், கோவை மாவட்ட எஸ்.பி., ஆகியோருக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.பகல், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் நடமாட்டம் இருப்பதால், இப்பகுதியில் பெண்கள் நடமாட அச்சம் ஏற்படுகிறது. டாஸ்மாக் கடையை அகற்ற விட்டால், விலை மதிக்க முடியாத மனித உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த டாஸ்மாக் கடை மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் ரயில்பாதையோரம் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அகற்றப்படும் என டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறி வந்தாலும், அவர்கள் அளித்த உறுதிமொழி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X