எங்கே செல்லும் இந்த பாதை...!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எங்கே செல்லும் இந்த பாதை...!

Added : ஜூலை 21, 2021
Share
மேட்டுப்பாளையம்:தமிழக அரசால் தடை செய்த, 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, நான்கு கடை உரிமையாளர்களுக்கு, 1,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் உட்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை, பயன்படுத்த கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில், வியாபாரிகள், தடை செய்த பிளாஸ்டிக்

மேட்டுப்பாளையம்:தமிழக அரசால் தடை செய்த, 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, நான்கு கடை உரிமையாளர்களுக்கு, 1,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் உட்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை, பயன்படுத்த கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில், வியாபாரிகள், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அடுத்து அரசு ஊரடங்கை அறிவித்தது. அதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், கடந்த வாரம், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் நகரில் பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துவது தெரியவந்தது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கவிதா உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர் வரதன், கார்த்திக் மணி ஆகியோர் கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.இதில் நான்கு கடைகளில் இருந்து, தடை செய்யப்பட்ட, 18 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு தலா, 300 ரூபாய் வீதம், 1,200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X