பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்னுமே புரியல உலகத்துல...!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:'விவசாய நிலத்தில், அரசின் அங்கீகாரம் இல்லாமல் வீடுகள் கட்டக்கூடாது' என, அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியுள்ளதாவது:துடியலுார் அருகே வெள்ளக்கிணறு கிராமத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், நிலம் மேம்பாடு பணிகள் நடந்து வருகின்றன. இங்குள்ள, 60 ஏக்கர் நிலப்பரப்பில் அரசின்

பெ.நா.பாளையம்:'விவசாய நிலத்தில், அரசின் அங்கீகாரம் இல்லாமல் வீடுகள் கட்டக்கூடாது' என, அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியுள்ளதாவது:துடியலுார் அருகே வெள்ளக்கிணறு கிராமத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், நிலம் மேம்பாடு பணிகள் நடந்து வருகின்றன. இங்குள்ள, 60 ஏக்கர் நிலப்பரப்பில் அரசின் அங்கீகாரம் பெறாமலும், நிலப்பயன் மாற்றம் செய்யாமலும் சட்டவிதிகளை மீறி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கோவை பிரிவு விவசாய நிலங்களில், வீட்டுமனை நிலமேம்பாடு அபிவிருத்தி பணிகளை செய்து வருகிறது.நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள போதும், உரிய திட்ட அனுமதி பெறாமல் பணிகள் நடப்பது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளோம். இந்நிலையில், நீர்நிலை நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து, மண்கொட்டி, மூடி வீட்டுமனைகளாக நில மேம்பாடு செய்து வருகிறது.உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, நீர்நிலை, நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, கடந்த ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்தை அரசு விதிகளை மீறி செய்யும் பணிகளை, வீட்டுவசதி வாரியம் நிறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.''உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X