சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்துறையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேலுசாமி முன்னிலை வகித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில், யானைகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க வேண்டும். வனப்பகுதியில்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேலுசாமி முன்னிலை வகித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில், யானைகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு வரும் யானைகளை, பட்டாசு வெடித்து விரட்ட கூடாது என, வனத்துறை கூறியதை திரும்பப்பெற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசினர்.இளைஞரணி சாம்ராஜ், சத்தியமங்கலம் வட்டார தலைவர் வேலுமணி, பா.ஜ., மாவட்ட செயலாளர் சக்திவேல், ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல், தாசம்பாளையம் ராஜேந்திரன், பாண்டுரங்கன், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் உட்பட, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். காரமடை வட்டார தலைவர் முருகையன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X