சின்னியம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்னியம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஜூலை 21, 2021
Share
சூலுார்;சின்னியம்பாளையத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், சூலுார் அடுத்த சின்னியம்பாளையத்தில் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் முகாமை துவக்கி வைத்தார்.

சூலுார்;சின்னியம்பாளையத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், சூலுார் அடுத்த சின்னியம்பாளையத்தில் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் முகாமை துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு முகாம் காலை, 9:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளாமான மாற்றுத்திறனாளிகள் தங்கள் உறவினர்களுடன், 9:00 மணிக்கே வந்துவிட்டனர். அமைச்சர், 11:00 மணிக்கு வந்து முகாமை துவக்கி வைத்த பின்னரே தடுப்பூசி போடும் பணி துவங்கியது. தாமதத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X