சிறுவாணியில் 157 மி.மீ., மழை; 27.87 அடியாக நீர்மட்டம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணியில் 157 மி.மீ., மழை; 27.87 அடியாக நீர்மட்டம் உயர்வு

Added : ஜூலை 21, 2021
Share
கோவை:கோவைக்கு மிக முக்கிய நீராதாரமான, சிறுவாணி அணை பகுதியில், 157 மி.மீ., மழை பதிவானது; 27.87 அடியாக, நீர் மட்டம் உயர்ந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு, சிறுவாணி அணையில் குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி

கோவை:கோவைக்கு மிக முக்கிய நீராதாரமான, சிறுவாணி அணை பகுதியில், 157 மி.மீ., மழை பதிவானது; 27.87 அடியாக, நீர் மட்டம் உயர்ந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு, சிறுவாணி அணையில் குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 157 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நீர் மட்டம், 27.87 அடியாக உயர்ந்திருக்கிறது. முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட அருவிகளில் இருந்தும் நீர் வரத்து காணப்படுகிறது. அணையில் இருந்து தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து, மாநகராட்சியில், 33 வார்டுகளுக்கும், வழியோர கிராம மக்களுக்கும் வழங்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் ஆறு நாட்களுக்கு ஒருமுறை சிறுவாணி குடிநீர் வழங்கப்படுகிறது.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், சிறுவாணி அணை அமைந்திருக்கும் பகுதியில், இன்னும், 10 நாட்களுக்கு மழைப்பொழிவு கூடுதலாக காணப்படும். அணை விரைவில் நிரம்புவதற்கான வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X