பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணில் என்ன கார் காலம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் குளக்கரையில் கொட்டப்படும் குப்பையில் தீ வைத்து வெளிவரும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் பெரியகுளம் உள்ளது. அவிநாசி ரோட்டில் உள்ள சூலுார் பிரிவு மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடாக இது உள்ளது. அதனால், வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்.இந்நிலையில், குளக்கரையில்
 கண்ணில் என்ன கார் காலம்

சூலுார்:சூலுார் குளக்கரையில் கொட்டப்படும் குப்பையில் தீ வைத்து வெளிவரும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் பெரியகுளம் உள்ளது. அவிநாசி ரோட்டில் உள்ள சூலுார் பிரிவு மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடாக இது உள்ளது. அதனால், வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும்.இந்நிலையில், குளக்கரையில் குப்பையை வீசி செல்வது அதிகரித்துள்ளது. இதனால், குளக்கரை பகுதி முழுக்க குப்பை குவிந்து கிடக்கிறது. பயன்படுத்திய மெத்தை, தலையணைகள், துணிகளையும் இரவு நேரங்களில் வீசி விடுகின்றனர்.இந்நிலையில், இந்த ரோட்டை கடந்து செல்வோர், பீடி, சிகரெட்டை அணைக்காமல் வீசி செல்வதால் குப்பையில் தீப்பற்றி புகை வெளிவருகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.எதிரில் வரும் வாகனங்கள், முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மண்டலம் உருவாகி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. வாகன ஓட்டிகள் கூறுகையில், 'குளத்தேரி ரோட்டில் குப்பையில் இருந்து கிளம்பும் புகையால் கண்கள் எரிச்சலுக்கு உள்ளாகின்றன. மூச்சு திணறுகிறது. இதனால், வாகனங்களை சரிவர இயக்க முடிவதில்லை. குப்பை கொட்டுவோரையும், தீ வைப்போரையும் கண்டறிந்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X