தோகை இளமயில் ஆடி வருகுது...!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோகை இளமயில் ஆடி வருகுது...!

Added : ஜூலை 21, 2021
Share
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மயில்கள் தொல்லையால், நடப்பாண்டு தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட கோடை கால பழங்களை பயிரிட, விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், வெள்ளமடை பகுதிகளில், ஆண்டுதோறும் தர்பூசணி, வெள்ளரிக்காய் பயிரிடப்படும். மயில்கள் தொல்லையால்,

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மயில்கள் தொல்லையால், நடப்பாண்டு தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட கோடை கால பழங்களை பயிரிட, விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், வெள்ளமடை பகுதிகளில், ஆண்டுதோறும் தர்பூசணி, வெள்ளரிக்காய் பயிரிடப்படும். மயில்கள் தொல்லையால், நடப்பாண்டு தர்பூசணி உள்ளிட்ட கோடை கால பழங்களை பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதால், அவற்றின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது:பொதுவாக, நவ., மாதத்தில் பயிரிடப்படும் தர்பூசணி, ஜன., பிப்., மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும். இவை ஜூன், ஜூலை மாதம் வரையில் விற்பனையில் இருக்கும். இப்பழங்கள், 5 முதல், 12 கிலோ வரை எடை இருக்கும். சாதாரணமாக, 90 நாட்களில் முழுமையாக வளர்ந்து விடும். சாகுபடியை நேர்த்தியாக செய்தால், ஏக்கர் ஒன்றுக்கு, 10 முதல், 15 டன் வரை விளைச்சல் எதிர்பார்க்கலாம். தமிழகத்தை விட, கேரளாவில் இப்பழத்துக்கு கிராக்கி அதிகம்.ஆனால், கோவை வடக்குப்பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், விவசாயிகள், இந்த விவசாயத்தில் ஈடுபட முடியாத சூழல் உருவாகியுள்ளது. விதைக்கும் போதே, விதைகளை உண்ண மயில்கள் வந்து விடுகின்றன.அதையும் மீறி காய், கனிந்து பழங்கள் உற்பத்தியானால், மயில்கள் பழங்களை கொத்தி சேதப்படுத்தி விடுகின்றன. சாதாரணமாக பழங்களை பாதுகாக்கவும், பூச்சி, வண்டு, நோய் தாக்காமல் இருக்க, வேளாண் துறை அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறது. ஆனால், மயில்களிடம் இருந்து பழங்களை காக்க, எவ்வித யோசனையும் வழங்குவதில்லை.இப்பிரச்னைக்கு வேளாண் மற்றும் வனத்துறையினர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தர்பூசணி, வெள்ளரி மட்டுமல்லாமல் தக்காளி உள்ளிட்ட பயிர் ரகங்களையும் எதிர்காலத்தில் விவசாயிகள் பயிரிட முடியாது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X