பொது செய்தி

தமிழ்நாடு

எங்க சோக கதைய கேளுங்க...!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:குடிநீர் தட்டுப்பாடு குறித்து கலெக்டரிடம் முறையிட ஊராட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், அத்திப்பாளையம், கள்ளிப்பாளையம், கீரணத்தம், வெள்ளாணைப்பட்டி, வெள்ளமடை என ஏழு ஊராட்சிகள் உள்ளன.இங்கு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு, தினமும் 25

கோவில்பாளையம்:குடிநீர் தட்டுப்பாடு குறித்து கலெக்டரிடம் முறையிட ஊராட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், அத்திப்பாளையம், கள்ளிப்பாளையம், கீரணத்தம், வெள்ளாணைப்பட்டி, வெள்ளமடை என ஏழு ஊராட்சிகள் உள்ளன.இங்கு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு, தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும், சராசரியாக எட்டு லட்சம் லிட்டர் நீர் தினமும் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நீர் போதுமானதாக இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.கடந்த மூன்று வாரங்களாக தினசரி வினியோகித்து வந்த நீரில் 30 சதவீதம் குறைக்கப்பட்டு விட்டது. இதனால், அத்திப்பாளையம், கொண்டையம்பாளையம் பகுதியில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.தினமும் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர். மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'குடிநீர் பற்றாக்குறையால், மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. எந்த அறிவிப்பும் இல்லாமல், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வினியோகித்து வந்த குடிநீரை குறைத்து விட்டனர்.கடந்த, 10 ஆண்டுகளில் இங்கு மக்கள் தொகை மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. அதற்கு ஏற்ப குடிநீர் வினியோகம் இல்லை. எனவே, கோவை கலெக்டரிடம் நேரில் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X