பொது செய்தி

தமிழ்நாடு

காத்திருந்து... காத்திருந்து...! புறவழிச்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் மக்களின் 25 ஆண்டு கனவான, கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில்,ரூ.2,000 கோடியில், புறவழிச்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னுார் உள்ளது. மில், பவுண்டரி, தொழிற்சாலைகள் அதிகரிப்பால், வாகனங்களின்
 காத்திருந்து... காத்திருந்து...! புறவழிச்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

அன்னுார்:அன்னுார் மக்களின் 25 ஆண்டு கனவான, கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில்,ரூ.2,000 கோடியில், புறவழிச்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னுார் உள்ளது. மில், பவுண்டரி, தொழிற்சாலைகள் அதிகரிப்பால், வாகனங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக புறவழிச்சாலை அமைக்க, பல்வேறு அமைப்புகள், 25 ஆண்டுகளாக போராடி வருகின்றன.நான்கு முறை சர்வே எடுக்கப்பட்டு, தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. திட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள காரே கவுண்டன்பாளையம், கரியாம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், நேற்று அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.இரண்டு மடங்கு தொகைதேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவி பொறியாளர் தினேஷ் பேசியதாவது:ஆணையம் சார்பில் 2,000 கோடி ரூபாயில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. கோவை முதல் கர்நாடக எல்லை வரை 90 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழி புறவழிச்சாலை மற்றும் ஏற்கனவே உள்ள சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் நிலம் கையகப்படுத்த 350 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு, இரண்டு மடங்கு தொகை வழங்கப்படும். இதனால் இந்த பாதையில் 100 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லலாம்.கிராமப்புறத்தில் கிராம சாலைகள் சந்திக்கும், 60 இடங்களில் சுரங்க பாதை அமைகிறது. விவசாயம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, 60 மீட்டருக்கு பதில் 45 மீட்டர் அகலத்திற்கு மட்டும் நிலம் எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தினால், 936 கட்டடடங்களை அகற்ற வேண்டும். 42 இடங்களில் வளைவுகளை நேர்படுத்தவேண்டும். எனவே, இந்த புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால், கோவையிலிருந்து சத்தி செல்லும் துாரம் குறையும். நேரம், எரிபொருள் செலவு குறையும். திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் பேசுகையில், ''நிலம் கையகப்படுத்தப்படுவதால், அருகில் உள்ள நிலத்தின் மதிப்பு கூடும். மீண்டும் ஒரு முறை கருத்து கேட்கப்படும்,'' என்றார்.தாசில்தார் ரத்தினம், நிலம் எடுப்பு தாசில்தார்கள் உமா பரமேஸ்வரி, துரைசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.தர மாட்டோம்: விவசாயிகள் உறுதிவிவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசுகையில், ''எங்கள் முன்னோர் தந்து சென்ற விவசாய நிலம். அதை எங்கள் உயிர் போனாலும் தர மாட்டோம். இத்திட்டத்தால், 2,000 ஏக்கர் விவசாய நிலம் அழியும். ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம். கிணத்துக்கடவில் உயர்மட்ட பாலம் அமைத்துள்ளனர். அதே போல் இங்கும் அமைக்கலாம். பல நுாறு கட்டடங்கள் நத்தம் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்றலாம். இந்த திட்டத்தால், பயண துாரம் அதிகமாகும். கிராம மக்கள் பாதிக்கப்படுவர். ஒரு ஏக்கர் நிலம் தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் அரசு 20 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கும்,'' என்றனர். அதிகாரிகள், விவசாயிகளின் ஆட்சேபனைகளை உயரதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என்று கூறி கூட்டத்தை முடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
21-ஜூலை-202112:21:42 IST Report Abuse
ellar நிலம் இழப்போர் கேட்கும் விலை அல்லது இன்றைய சந்தை மதிப்பு+35% ஆவது கொடுப்பது தான் நியாயம். சமூகத்தில் வேறு யாரும் இவ்வாறான சட்டத்தில் தங்களது சொத்தை இழந்து சமுதாயம் வாழ பார்த்து கொண்டு இருப்பது இல்லை. அந்த சொத்தை இழப்பவருக்கு வேறு வழி உள்ளதா என்பதை யாரும் கேட்பதே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X