பொது செய்தி

தமிழ்நாடு

ஏதோ... நினைவுகள் கனவுகள்...!

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
அன்னுார்:சட்டசபை தேர்தலின்போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம், 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனதி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், கூட்டுக்குடும்பமாக வசிப்போர் உள்பட பலரும், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.அன்னுார் தாலுகா அலுவலகத்தில், கடந்த 9

அன்னுார்:சட்டசபை தேர்தலின்போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம், 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனதி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், கூட்டுக்குடும்பமாக வசிப்போர் உள்பட பலரும், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.அன்னுார் தாலுகா அலுவலகத்தில், கடந்த 9 ஆண்டுகளில் தற்போது தான் அதிக அளவில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அன்னுார் தாலுகாவில், 50 ஆயிரத்து 874 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், 581 சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள், 3573 அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்கள், 1345 முதியோர் உதவித்தொகை பெறும் கார்டுதாரர்கள் உள்பட, 56 ஆயிரத்து 426 ரேஷன் கார்டுகள் உள்ளன. ''கடந்த மூன்று மாதங்களில், 1,886 புதிய விண்ணப்பங்கள் ரேஷன் கார்டு கோரி வந்துள்ளன. இதுகுறித்து, குடிமைப்பொருள் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், முதல்கட்டமாக, 931 விண்ணப்பங்கள் தகுதியானவை என கண்டறியப்பட்டு உள்ளன. மற்ற விண்ணப்பங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்,'' என, குடிமை பொருள் தாசில்தார் பழனிச்சாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X