அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு யார் காரணம் தி.மு.க.,வுக்கு காங்., பதிலடி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது காங். ஆட்சியில் தான். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.ஜெயலலிதா இருந்த போதும் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன்பின் வந்த பழனிசாமி தான் இந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்'. இப்படி நீட் தேர்வுக்கு

சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது காங். ஆட்சியில் தான். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.



latest tamil news



ஜெயலலிதா இருந்த போதும் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன்பின் வந்த பழனிசாமி தான் இந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்'. இப்படி நீட் தேர்வுக்கு காங்கிரஸ் மற்றும் பழனிசாமி தான் காரணம் என்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக காங். செய்தி தொடர்பாளர் சந்திரசேகரன் கூறியதாவது: 'நீட்' தேர்வை கொண்டு வர முயன்றது காங். - - தி.மு.க. கூட்டணி அரசு தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியா முழுதும் மருத்துவ படிப்புக்கு ஒரே மாதிரியான தேர்வுநடத்தப் பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றே நீட் தேர்வை அப்போதைய காங். கூட்டணி அரசு கொண்டு வர முயன்றது. ஆனால் குறிப்பிட்ட மாநிலங்கள் தகுந்தகாரணங்களைச் சொல்லி விலக்குக் கோரினால் சில காலத்திற்கு விலக்கு அளிக்கலாம் என்ற ஷரத்தும் காங். அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்து தான்அப்போதைய தி.மு.க. அரசும் அடுத்து வந்த ஜெயலலிதாவும் கூட நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றனர்.


latest tamil news



நீட் தேர்வை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்டாயமாக அமல்படுத்தியது பா.ஜ. அரசு தான். அவர்கள் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டும் பழனிசாமி முதல்வரானதும் நீட் தேர்வை கொண்டு வந்து விட்டனர். இது தான் உண்மை. இப்படித் தான் நிறைய விஷயங்களில் காங். மீது பழி போடுகின்றனர். அதாவது - ஐ.மு. கூட்டணி ஆட்சி மீது பழி போட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு கிளப்பி விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




அ.தி.மு.க., சொல்வது என்ன


அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: 'தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யும் அறிவிப்பில் தான் என் முதல் கையெழுத்து இருக்கும்' என சொன்னாரே தற்போதைய முதல்வர் ஸ்டாலின்; அதை ஏன் செய்யவில்லை. செய்ய முடியாது. அது தெரிந்து விட்டது. அதனால் தான் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றுவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி போட்டு கருத்து வாங்கினர்.

என்ன நடந்து விட்டது? இதோ நீட் தேர்வுக்கு தேதி அறிவித்து விட்டனர். ரத்து செய்வதாகசொன்னவர்கள் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர்.அ.தி.மு.க.வை பொறுத்த வரை சமூக நீதி அடிப்படையில் நீட் தேர்வை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது தான் கொள்கை. ஆனல் நடை முறையில் சாத்தியம் இல்லை என்றதும் அரசு பள்ளி மாணவர்களும் ஏழை மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து கிராம மாணவர்களின் கனவை நினைவாக்கினோம். அதை 10.5சதவீதமாக உயர்த்திக் கொடுக்கலாம்.


latest tamil news



அது அரசால் முடியும். அதைச் செய்தாலே ஓரளவுக்கு சமூக நீதி காப்பாற்றப்பட்டு விடும். ஆனால் அதை விடுத்து செய்ய முடியாத ஒரு விஷயத்தை செய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என்பதால் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல தி.மு.க. அரசு 'டிராமா' போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202120:09:49 IST Report Abuse
Jai வழக்கம்போல் பிஜேபி தாக்காமல் இந்தமுறை, திமுக காங்கிரசை தாக்கி அறிக்கை விட்டுள்ளது. உள்நோக்கம் இல்லாமல் நடக்காது...
Rate this:
Cancel
Jay - Bhavani,இந்தியா
21-ஜூலை-202115:33:14 IST Report Abuse
Jay கூடிய விரைவில் மத்திய அரசு பொறியியல் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டள்ளது. அதற்கு இப்போதே தயராக வேண்டும்
Rate this:
Cancel
Jay - Bhavani,இந்தியா
21-ஜூலை-202115:31:16 IST Report Abuse
Jay மாணவர்களை குழப்பாமல் நன்கு தயார் செய்து நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் அனைத்து இந்தியா கோட்டாவில் மாநில மாணவர்கள் நிறைய மாணவர்கள் இடம் பெற முயற்சிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X